ஊர்வசிக்கு விவாகரத்து!

முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் இயக்குநர் பாக்யராஜால் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி.
அதன்பிறகு பாட்டி சொல்லைத் தட்டாதே, மகளிர் மட்டும்,மைக்கேல் மதன காமராஜன், மாயா பஜார், சுயம்வரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை 1999-ல் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குழந்தையை இப்போது மனோஜ் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் கணவர் தன்னை கொடுமைப் படுத்துவதாகக் கூறி சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ஊர்வசி.
கடந்தமாத விசாரணையின் போது இருவரையும் சமரசப்படுத்தும் வகையில் இவ்வழக்கு சமரச மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சுமார் 3 மணி நேரம் சமரச மைய உறுப்பினர்கள் முன்பு பேச்சு வார்த்தை நடந்தது. இதில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து இருவரும் நீதிபதி முன்பு ஆஜராகி பிரிந்து செல்ல முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
இதன்பின் கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்த செல்ல முடிவு செய்துள்ளதாக கூறி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி கலையரசன் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ஊர்வசியும், மனோஜ் கே. ஜெயனும் ஆஜராகவில்லை. ஆனாலும் நீதிபதி இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்த செல்ல முடிவு செய்திருப்பதால் இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











