போலீஸ் ஸ்டேஷனில் புளோரா

போலி ஆவணங்களைக் கொடுத்து அமெரிக்க விசா பெற முயன்றதாக நடிகை புளோரா, ஸ்ரீலதா, புரோக்கர் வெங்கட் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் புளோராவுக்கும், ஸ்ரீலதாவுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
புளோரா, ஒரு வாரத்திற்கு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
அதன்படி ஜாமீனில் வெளியே வந்த புளோரா இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தார். காவல் நிலையத்தின் முன் பகுதியில் பெரும் கூட்டம் கூடியிருந்ததால், பின் வாசல் வழியாக காவல் நிலையத்திற்குள் வந்தார்.
இன்ஸ்பெக்டர் அறைக்குச் சென்று அங்கு கையெழுத்திட்டார். பின்னர் முன்வாசல் வழியாக அவர் வெளியேற முயன்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள், டிவி கேமராமேன்கள் புளோராவை படம் பிடிக்க முயன்றனர்.
புளோராவுக்குப் பாதுகாப்பாக வந்த இளைஞர்கள் அவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











