காதல் தோல்வியில் தவிக்கும் ஜெனிலியா

பாய்ஸ் மூலம் தமிழிலும் பொம்மரிலு மூலம் தெலுங்கிலும் நுழைந்த ஹரிணிக்கு மகாராஷ்ர முதல்வரின் மகனும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குடன் காதல் அரும்பியது.
முஜே தேரி கஸம் என்ற இந்திப் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது உருவான காதல் இது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் காதல் வளர்த்தனர் இவர்கள்.
சந்தோஷ் சுப்ரமணியம் படம் வளர்ந்து கொண்டிருந்தபோது அந்தக் காதல் படு தீவிரமாகிவிட்டதாம். இனி நீயின்றி நானில்லை என சினிமா பாணியில் வசனம் பேசி, ஜெனிலியாவைத் திருமணம் செய்ய நாள் குறித்துவிட்டாராம் ரித்தேஷ்.
ஆனால், விஷயம் ரிதேஷின் குடும்பத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. மராட்டிய பாரம்பரியம், அரசியல் செல்வாக்கு மிக்க தமது குடும்பத்துக்கு ஆங்கிலோ-இந்திய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நடிகையா மருமகளாக வந்தால் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கே பாதிக்கப்படும் என அவர்களுக்கு மகா கடுப்பு.
இதனால் ரிதேசுக்கு 'பாடம்' எடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜெனிலியாவும் ரிதேஷூம் திருமணம் செய்து கொள்ள கோவாவிலுள்ள ஒரு சர்ச்சில் அறிவிப்பு கொடுத்திருந்தார்களாம். ஆனால் திருமண நாளன்று ஜெனிலியா மட்டும்தான் சர்ச்சுக்கு வந்தாராம். வழக்கமான சினிமா கதாநாயகன் மாதிரி ரிதேஷ் கம்பி நீட்டிவிட மகா வருத்தத்துடன் வீடு திரும்பியிருக்கிறார் ஜெனிலியா.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஜெனியாவின் அம்மா காய்ச்சி எடுத்துவிட்டாராம்.
காதல் தோல்வியால் இப்போதெல்லாம் மகா சோகமாகவே படப்பிடிப்புக்கு வந்து போகிறாராம் ஜெனி.
ஒரு சினிமாவே எடுக்கலாம் போலிருக்கே...


Click it and Unblock the Notifications











