சங்கீதா திருமணம்-கிரிஷ் தந்தை எதிர்ப்பு

உயிர், பிதாமகன் பட நாயகி சங்கீதா, பாடகர் கிரிஷ் திருமணம் திருவண்ணாமலையில் பிப்ரவரி 1ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பிலும் முழு சம்மதத்தோடு இந்தத் திருமணம் நடப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது மணமகன் தரப்பிலிருந்து இந்த திருமணத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிரிஷ் அப்பா பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'சங்கீதா- கிரிஷ் திருமண ஏற்பாட்டில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது: என் மகனை விட சங்கீதா வயதில் மூத்தவர். ஆரம்பத்திலிருந்தே இந்தக் கல்யாணம் வேண்டாம் என்றே கூறிவந்தோம். ஆனால் என் மகனை எப்படியோ வசப்படுத்திவிட்டனர்.
ஆனால் அவர்கள் திருமண முடிவில் உறுதியாக இருப்பதால், இதுபற்றி மேலும் பேச விரும்பவில்லை என்றார்.
Comments


Click it and Unblock the Notifications