விபத்திலும் மாறாத ஹன்சிகாவின் தொழில் பக்தி!

By Staff

Hansika
டோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் கவர்ச்சிப் புயல் ஹன்ஸிகா ஐதராபாத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். மஸ்கா எனும் தெலுங்குப் படப்பிடிப்புக்கு போகும்போதுதான் இந்த விபத்து நடந்தது.

அதிர்ஷ்டவசமாக கையில் காயத்துடன் (ரத்தம் கொட்டியது!) தப்பிவிட்டார். உடனே அவரை பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிப் போனார்கள். சிகிச்சைக்குப் பிறகு நன்றாக ஓய்வெடுங்கள் என மருத்துவர்கள் கூறினாலும் இருப்புக் கொள்ளவில்லையாம் அம்மணிக்கு.

அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மருக்குவமனையிலிருந்து வெளியே வந்துவிட்ட ஹன்ஸிகா, நேராக படப்பிடிப்புத் தளத்துக்குப் போய்விட்டார். கதாநாயகிக்கு விபத்து என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிடும் மூடிலிருந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் இவரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

இந்த சின்ன விபத்துக்காக படப்பிடிப்பைக் கேன்சல் செய்யாதீர்கள். எனக்கும் ஒருநாள் கால்ஷீட் வேஸ்டாகிடும், உங்களுக்கும் வீண் செலவு. இன்றைக்கு எடுக்க வேண்டிய காட்சிகளை தயவு செய்து எடுத்து முடித்துவிடுங்கள், என்று கேட்டுக் கொண்டாராம்.

நடிகையின் தெளிவான தொழில் பக்தியைப் பார்த்துப் புல்லரித்துப் போன இயக்குநர், அன்றைய காட்சிகளை திட்டமிட்டபடி எடுத்து முடித்தாராம்.

ஹன்ஸிகாவின் 'கமிட்மெண்ட்' பின்னணி அவருக்கல்லவா தெரியும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X