மறுபடியும் 5 நாயகிகள்!

ராமன் தேடிய சீதை வணிக ரீதியாக நன்றாகப் போவதால் அந்த செண்டிமெண்டை விடுவானேன் என்று, அதே போன்றதொரு கதையைத் தயார் செய்துள்ளார் ஜெகன்நாத்.
தனது புதுப்படம் குறித்து அவர் கூறியதாவது:
ராமன் தேடிய சீதைக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கான கதையை தயார் செய்துவிட்டேன்.
பொதுவாக வங்காள மொழிப் படங்கள்தான் தரமானவை என்று நம்மவர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். முயற்சித்தால் வங்காள மொழிப் படங்களை விட தரத்திலும் தொழில் நுட்பத்திலும் மேம்பட்ட பல படங்களை நம்மால் தர முடியும். அதற்கான வாய்ப்புகள் இங்குள்ளன.
வங்காள மொழி மட்டுமல்ல, இந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும்படியான படங்களைத்தான் இனி தரப்போகிறேன்.
எனது அடுத்த படம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் படமாக உள்ளது. ராமன் தேடிய சீதை போல இதிலும் 5 கதாநாயகிகள். நாயகனாக பசுபதி நடிக்கிறார். ஜனவரி மாதம் படப்பிடிப்பு, என அடுக்கிக் கொண்டே போகிறார் ஜெகன்நாத்.
கதைக்கு தேவையென்றால் இன்னும் 5 நாயகிகள் கூட சரிதான். ஆனால் வெறும் செண்டிமெண்டுக்காகவென்றால் சரிப்படுமா பிரதர்!--


Click it and Unblock the Notifications











