அந்தமானில் ஜெகன்மோகினி

80களில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி இரு மாநில ரசிகர்களையும் மிரள வைத்த படம் ஜெகன்மோகனி. அதில் வந்த பேய் காட்சிகள் இன்றளவும் ரொம்பப் பிரபலம்.
எந்தவித டெக்னாலஜியும் இல்லாத அந்தக் காலத்திலேயே, இந்தக் காலத்திற்கு இணையாக மாயாஜால காட்சிகளை பிரமிப்பூட்டும் வகையில் எடுத்திருப்பார் இயக்குநர் விட்டலாச்சார்யா.
அவரது அத்தனை படங்களுமே மாயாஜாலப் படங்கள்தான். அதில் மிக மிக பிரபலமான படம் ஜெகன்மோகினிதான்.
தந்திரக் காட்சிகள், பேய்க் காட்சிகள் ஆகியவற்றுக்கு இணையாக பிரபலமான ஒரு விஷயம், ஜெயமாலினியின் நடிப்பு. கவர்ச்சியும், நடிப்புமாக பிரமிக்க வைத்திருப்பார் ஜெயமாலினி.
இப்போது ஜெகன்மோகினி ரீமேக் ஆகப் போகிறது. ஜெயமாலினி நடித்த கேரக்டரில் நமீதா நடிக்கவுள்ளார். இதற்காக அவர் ஜெகன்மோகினி படத்தை விசிடியில் போட்டு ஜெயமாலியின் நடிப்பை கவனித்து பிராக்டிஸ் செய்து வருகிறாராம்.
படத்தை அந்தமானில் எடுக்க தீர்மானித்துள்ளனர். இதற்காக அங்கு பிரமாண்ட செட் போட்டுள்ளனராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











