உதய்பூரில் கரீனா கொண்டாட்டம்!

நேற்று இதற்காக கரீனா கபூரும், சைப் அலி கானும் ஜோடியாக உதய்பூர் வந்தனர். இருவரும் தங்கியுள்ள உதய்விலாஸ் ஹோட்டலுக்கு வெளியே ஏகப்பட்ட ரசிகர்கள் திரண்டு நின்றிருந்தனர்.
இதே ஹோட்டலில் செப்டம்பர் 21ம் தேதி கரீனா தனது பிறந்த நாளையும், மற்றும் நாளை ரம்ஜானையும் இருவரும் இணைந்து கொண்டாடுகின்றனர்.
கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் பெரிய மூக்குக் கண்ணாடியுடன் கலக்கலாக வந்திருந்தார் கரீனா. வெள்ளை நிற குர்தா மற்றும் நீல நிற ஸ்கார்ப் கட்டி மெஜஸ்ட்டிக்காக காணப்பட்டார் சைப் அலி கான்.
உதய்பூர் பயணத்தின்போது இருவரும் இணைந்து கிங்பிஷர் இதழுக்கான புகைப்பட ஷூட்டிங்கிலும் கலந்து கொள்கின்றனராம்.
Comments


Click it and Unblock the Notifications