இந்திரா காந்தியாக மாதுரி தீக்ஷித்!!

By Staff

http://photos.filmibeat.com/main.php?g2_itemId=240292
மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கிறார் பாலிவுட்டின் முன்னாள் கனவு நாயகி மாதுரி தீக்ஷித்.

தேஸாப், தில் தோ பாகல் ஹை, தேவ்தாஸ் என வெற்றிப் படங்களில் நடித்தவர் மாதுரி தீக்ஷித். பாலிவுட்டில் அதிக ஆண்டுகள் முதல் நிலை நாயகியாகவே இருந்தவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இவர் உச்சத்தில் இருந்தார். திருமணமானாலும் நடிப்பைத் தொடரும் மாதுரிக்கு இரு மகன்கள் உள்ளனர். இப்போது 42 வயதான நிலையில் மாதுரி இந்தப் படம் மூலம் அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகிறார் பாலிவுட்டில்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாகத் தயாராகிறது. இந்தப் படத்தில் நடிக்க மாதுரி தீக்ஷித்தான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தை பிரபல டைரக்டர் கிருஷ்ணாஷா இயக்குகிறார். திரைக்கதை, தயாராகிவிட்டது. வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு உள்ளனர். 2011 இறுதியில் படம் ரிலீசாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா போன்ற நாடுகளில் நடக்க உள்ளது.

இந்திராவின் இளமைப் பருவம், திருமண வாழ்க்கை, அரசியல் பிரவேசம், பிரதமரானது இறுதியில் பாதுகாவலராலேயே சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற அனைத்தும் இப்படத்தில் காட்சிகளாக்கப்படுகின்றன.

ஒரு சந்தோமான செய்தி... இந்தப் படத்தில் வழக்கமான பாடல்கள் இருக்காது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X