நமீதாவை பிரிந்த பரத் கபூர்

By Staff

Namitha with Bharath Kapoor
காதலர் பரத் கபூருடனான தனது உறவையும், நட்பையும் நமீதா துண்டித்து விட்டாராம். இப்போது இருவரும் தனித் தனியாக வசிக்க ஆரம்பித்துள்ளனராம்.

பரத் கபூர், நமீதாவின் நெருங்கிய நண்பராகவும் செயல்பட்டு வந்தார். ஆரம்பத்தில் நமீதாவின் நிழல் போல கூடவே வந்து போய் கொண்டிருந்தார். இருவரும் ஒரே வீட்டிலும் வசித்து வந்தனர்.

இந்த பல வருட கால நட்பு இப்போது முறிந்து போய் விட்டதாம்.

ஆரம்பத்தில் நமீதாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் பரத் கபூர்தான். கோலிவுட்டில் நமீதாவுக்கு நிலையான அந்தஸ்து கிடைக்கவும் காரணமாக இருந்தவர் கபூர்தான்.

ஆனால் நாளடைவில் பரத் கூடவே இருப்பதை பெரும் தடையாக கருத ஆரம்பித்தார் நமீதா. காரணம், தன்னை அணுக நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கும், திரையுலகினருக்கும் இடையே நந்தி போல பரத் கபூர் இருப்பதாக நமீதா நினைத்ததுதான்.

இந்த நிலையில்தான் நமீதாவின் அப்பா முகேஷ், நமீதாவின் விவகாரங்களில் தலையிட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கால்ஷீட் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திய அவர் அப்படியே சென்னைக்கு ஷி்ப்ட் ஆகி நமீதாவுடன் தங்கி விட்டார்.

இடத்தைக் காலி செய்யும் நேரம் வந்து விட்டதாக உணர்ந்த பரத் கபூர், தனது வழியைப் பார்த்துப் போய் விட்டார். புதிதாக ஒரு காதலி கூட அவருக்குக் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்போது பரத் கபூர் தன்னிடம் இல்லை என்ற நற்செய்தியை தயாரிப்பாளர்களுக்கும், கோலிவுட்டினருக்கும் நமீதாவே தனது வாயால் தெரிவித்து விட்டாராம்.

எவ்ளோ பெரிய சமாச்சாராம்! - இனி பொருளாதார நிலைமை மேம்பட்டு விடும் - நமீதாவுக்கு!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X