நயனதாரா-இங்கே கோடி, அங்கே லட்சம்!

By Staff

Nayantara
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு கோடியைத் தொட்டுள்ள நயனதாரா, மலையாளத்தில் சமீபத்தில் 15 லட்சம் சம்பளத்திற்கு ஒரு படத்தை ஒத்துக் கொண்டுள்ளாராம்.

இந்திய சினிமாவிலேயே மிகப் பெரிய பீல்டாக மும்பைக்கு அடுத்து சென்னைதான் உள்ளது. இந்திப் படங்களுக்கு இணையாக தமிழிலும் பிசினஸ் படு கிராண்டாக, பிசியாக நடந்து கொண்டிருக்கிறது.

உலக அளவில் மார்க்கெட் உள்ள இந்திய சினிமா துறையாகவும் தமிழ்த் திரையுலகம் திகழ்கிறது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் நடிக்க நடிகர்கள், நடிகைகளிடையே மோகம் ஜாஸ்தி.

குறிப்பாக மலையாள நடிகைகள் பலரும் தமிழ் சினிமா மூலம்தான் இந்திய சினிமாவுக்கே அறிமுகமாகிறார்கள். அப்படி அறிமுகமாவதையும் விரும்புகிறார்கள்.

எத்தனையோ தெலுங்குப் படங்களில் நடித்தும் கூட ஆசினால், தமிழ் சினிமா மூலம் கிடைத்த அடையாளத்தை வைத்துத்தான் இந்திக்குப் போக முடிந்தது.

இங்கு இதுவரை நடிகர்கள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் முதல் முறையாக திரிஷாவும், நயனதாராவும் கோடியைத் தொட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட லிங்குச்சாமியின் பையா படத்தில் நடிக்க கோடியையும் தாண்டி சம்பளம் பேசப்பட்டார் நயனதாரா. ஆனால் அவரது சமீபத்திய இரு படங்கள் கோட்டை விட்டு விட்டதால் சம்பளத்தை சற்று குறைக்க விரும்பினார் லிங்குச்சாமி.

உடனே கோபப்பட்ட நயனதாரா படத்திலிருந்தே விலகிக் கொண்டார். ஆனால் நயனதாராவின் வீராப்பு தமிழில்தான். மலையாளத்தில் சமீபத்தில் ஒரு படத்தில் நடிக்க 15 லட்சம் சம்பளத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளாராம் நயன்.

தமிழில் செகண்ட் ஹீரோக்களுக்கு இணையான சம்பளம்தான் மலையாளத்தில் உள்ள சூப்பர் ஹீரோக்களுக்குக் கொடுக்கிறார்கள். நடிகைகளுக்கோ ரொம்ப கம்மி.

இப்போது நயனதாராவுக்குக் கொடுத்துள்ள சம்பளம் கூட அங்குள்ள நாயகிகளுடன் ஒப்பிடுகையில் ரொம்பக் குறைவாம்.

ரொம்ப நாளைக்குப் பிறகு மலையாளத்தில் நயன் நடிக்கப் போகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X