தெலுங்கு தேசத்துக்கு பிரச்சாரமா?-பூமிகா

தமிழ்-தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பூமிகா. சமீபத்தில் இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடந்த ரத்த வங்கி ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து பூமிகா தெலுங்கு தேசத்தில் சேர்ந்து விட்டதாகவும் அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும் செய்தி பரவியது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பூமிகா கூறியதாவது:
எனக்கு சமூக சேவையில் ஆர்வம் அதிகம். அதனால்தான் நான் தெலுங்குதேசம் கட்சி நடத்திய ரத்த வங்கி விழாவில் கலந்து கொண்டேன்.
இதை வைத்து நான் தெலுங்குதேசத்தில் சேர்ந்து பிரசாரம் செய்யப் போவதாக வதந்தியை பரப்பி விட்டார்கள். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது.
எனக்கு சமூக சேவையில்தான் ஆர்வமே தவிர அரசியலில் இல்லை. இப்போதைக்கு என் லட்சியம் எல்லாம் சினிமாவில் நன்றாக நடித்து பெயர் எடுப்பதுதான். தெலுஙஅகு தேசத்தில் நான் இணைந்து விட்டதாக எனக்கு வேண்டாத சிலர்தான் வதந்தியை பரப்பி வருகிறார்கள், என்றார் பூமிகா.


Click it and Unblock the Notifications











