வயிற்றைக் கட்டும் பூர்ணா

கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த பூர்ணா, இப்போது தமிழில் படு பிசியாகி வருகிறார். கை நிறையப் படங்கள் இருக்கிறதாம்.
வித்தகன், அர்ஜூனன் காதலி, கந்தகோட்டை, துரோகி என பிசியாக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறார் பூர்ணா. வந்த புதிதில் இருந்தது போல இல்லாமல், இப்போது தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருப்பதால் கேரளாவுக்கு செல்வதே இல்லையாம். தொடர்ந்து சென்னையிலேயே தங்கியிருக்கிறார் பூர்ணா.
இதன் காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாராம் பூர்ணா. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதில்லையாம். கேரளாவில் சொந்த வீட்டில் இருந்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பாராம். குறிப்பாக பிரியாணியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டால் போதுமாம், ஒரு கட்டு கட்டி விடுவாராம்.
இப்போது சென்னைக்கு வந்த பின்னர் பிரியாணியை சுத்தமாக மறந்து விட்டாராம். மேலும், அளவோடு சாப்பிட்டு வயிற்றையும், உடலையும் கவனமாக பார்த்துக் கொள்கிறாராம்.
சாப்பாட்டை கட்டுப்படுத்தி விட்டதால் ஆட்டோமேட்டிக்காக உடலும் ஸ்லிம் ஆகி விட்டதாம் பூர்ணாவுக்கு.


Click it and Unblock the Notifications











