ராக்கி - எலேஷ் கல்யாணம் ரத்து?

இப்படித்தான் நடக்கும் என்று முன்பே பலர் கணித்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம், ராக்கிக்கும், எலேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் நினைக்கவில்லை.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ராக்கி சாவந்த் நடத்திய சுயம்வரம் மூலம் அவரால் தேர்வு செய்யப்பட்டவர் கனடாவைச் சேர்ந்த என்.ஆர்.ஐ தொழிலதிபரான எலேஷ் பருஜன்வாலா.
இருவரும் சுயம்வரத்தின் முடிவில் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எலேஷ் பிறகு கல்யாணம் செய்து கொள்ளலாம் என கூறி விட்டதால் கல்யாணம் தள்ளிப் போடப்பட்டது.
தற்போது எலேஷும், ராக்கியும், இணைந்து பதி பத்னி அவுர் வோ என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ரியாலிட்டி ஷோவின்போது இருவருக்கும் இடையே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விட்டதாம். இதனால் கல்யாணத்தை ரத்து செய்யும மன நிலைக்கு வந்து விட்டாராம் ராக்கி. ரியாலிட்டி ஷோவின் முடிவில் இதை அவர் முறைப்படி அறிவிக்கவுள்ளாராம்.
இதுகுறித்து ராக்கியின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், உண்மையில் இருவரும் மணந்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை. ரியாலிட்டி ஷோவின் கடைசி அத்தியாயத்தின்போது தனது முடிவை ராக்கி அறிவிப்பார் என்றார்.
ராக்கி இதுகுறித்து நேரடியாக பதிலளிக்கவில்லை. இருப்பினும் எலேஷ் குறித்து அவர் கூறுகையில், நானும், எலேஷும் வித்தியாசமான கலச்சாரங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம்.
அவர் மேலைநாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுகிறார். நான் நமது நாட்டு கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறேன்.
மேற்கத்திய மதிப்பீடுகளுடன் கூடிய ஒரு ஆணை இந்தியப் பெண்ணால் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த ரியாலிட்டி ஷோவின்போதும் கூட எங்களுக்குள் நிறைய ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு விட்டன என்றார் ராக்கி.
கடைசியில், எல்லோரும் சொன்னது போலவே இது விளம்பரம் தேடும் செயலோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது..


Click it and Unblock the Notifications











