ரோசாவின் சூடான யோகா!

By Staff

Rosa Catalano
இந்தித் திரையுலகில் புகுந்துள்ள இத்தாலி நடிகை ரோசா காடலோனா, படு சூடான அறையில், கடும் வெப்பத்துக்கு மத்தியில் வியர்க்க விறுவிறுக்க யோகாசனம் பயின்று வருகிறாராம்.

காத்ரோன் கே கிலாடி என்ற படத்தில் நடிக்கிறார் ரோசா. படத்தில் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளில் பிரமாதப்படுத்தி வருகிறார். இதற்காக கடுமையான பயிற்சியையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு உலகப் புகழ் பெற்ற யோகா ஆசிரியர் பிக்ரமின் நேரடி கண்காணிப்பில், யோகாசனமும் பயின்று வருகிறார்.

தினசரி அவர் யோகா செய்யும் அறை 40 டிகிரி சூடு கொண்டதாக வைக்கப்படுகிறதாம். இந்த சூட்டோடு, வியர்க்க விறுவிறுக்க யோகா செய்கிறாராம் ரோசா.

இதுகுறித்து அவர் கூறுகையில், மிகக் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கும் அறையில் நான் தினசரி யோகாசனம் செய்கிறேன். அவ்வளவு சூட்டில் யோகா செய்வது சாதாரணமான காரியமல்ல.

ஆனால் அப்படிப்பட்ட கடும் சூட்டுக்கு மத்தியில் யோகா செய்தால்தான் அது நமக்கு பலன் தரும். புத்துணர்ச்சி கிடைக்கும். மன அமைதி ஏற்படும்.

இந்த யோகாவை நான் மிகவும் அனுபவித்து செய்து வருகிறேன் என்கிறார் ரோசா.

யோகாவை மிக மிக சீரியஸாக கற்றுக் கொண்டு வருகிறார் ரோசா. எதிர்காலத்தில் யோகாசன டீச்சராக வரப் போகிறாராம் ரோசா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X