இந்தியை நம்பினேன்... பிற மொழி வாய்ப்புகள் போனதுதான் மிச்சம்! - சதா

தொடர்ந்து பல தமிழ் ஹிட் படங்களில் நடித்தவர் சதா. ஆனால் அந்நியன் மற்றும் உன்னாலே உன்னாலே படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் காணாமல் போய்விட்டார். இந்திப் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தன. சில வருடங்கள் கழித்து மீண்டும் புலிவேஷம் படத்தில் நடிக்கிறார் சதா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தெலுங்கு, தமிழில், ஜெயம் ஹிட்டானதை தொடர்ந்து, அதிக பட வாய்ப்புகள் வந்தன. இதில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த அந்நியன் தென்னிந்திய மொழிகளில் என்னை மேலும் அடையாளம் காட்டியது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 20 படங்களில் நடித்துவிட்டு இந்தி படங்களில் நடிக்க முடிவு செய்தேன். லவ் கிச்சடி, கிளிக் படங்களில் நடித்தேன். இந்த படங்கள் சரியான நேரங்களில் ரிலீசாகவில்லை. ஷூட்டிங் தொடங்கி, இழுத்துக்கொண்டே சென்றது. எனது கால்ஷீட்டும் வீணானது. ஒப்பந்தப்படி, இந்த படங்களை முடித்துவிட்டுதான் அடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்ற விதி இருந்ததால் பல வாய்ப்புகளை இழக்க வேண்டியதாகிவிட்டது.
இதற்காக யாரையும் குற்றம் சொல்லவில்லை. இப்போது தமிழில் புலி வேஷம் படத்தில் நடித்து வருகிறேன். இந்தியில், கல்பாலி, கன்னடத்தில் மல்லரி, துண்டா துண்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்...", என்றார்.


Click it and Unblock the Notifications











