மர்மத் தொடரில் திகிலூட்ட வரும் சங்கீதா!

பாலிமர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இநந்த திகில் தொடருக்கு அமுதசுரபி என்று தலைப்பிட்டுள்ளனர்.
மர்மதேசம் உள்ளிட்ட த்ரில்லர் சீரியல்களைத் தந்த நாகா இயக்கும் தொடர் இது. ஏற்கென பெரிய திரையில் ஷங்கர் தயாரித்துள்ள அனந்தபுரத்து வீடு எனும் படத்தை இயக்கிய நாகா, அந்தப் படத்தின் வெளியீட்டுக்குக் காத்திராமல் இந்த பாலிமர் டிவி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இனி சின்னத்திரைதானா? என்று சங்கீதாவிடம் கேட்டால்,
"யார் சொன்னது? பெரிய திரையில் எனக்கான வாய்ப்புகள் ஏராளமாய் உள்ளன. இந்த தொடரில் சின்ன ரோலில் நான் வருகிறேன். நான்தான் நடிக்க வேண்டும் என ரொம்ப வற்புறுத்தியதால் நடித்தேன். எனது பாத்திரத்தின் பெயர் மணிமேகலை. செம த்ரில்லிங் கேரக்டர். இந்த தொடரோடு சரி... வேறு சீரியலில் நடிக்க மாட்டேன்" என்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications