பெரிதாக எதிர்பார்க்கும் ஷாமிலி

By Staff

Shamili, Shalini and Shalini's dauthter Anoushka
நடிகை ஷாலினியின் தங்கச்சியான ஷாமிலிக்கு சாதாரண பேனர் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லையாம். பெரிய பேனர்களாக வந்தால்தான் பரிசீலிக்கவே ஒப்புக் கொள்கிறாராம்.

ஷாலினி பாணியில், ஷாமிலியும் குட்டிப் பாப்பாவாக நிறையப் படங்களில் நடித்துள்ளார். இப்போது குமரிப் பெண்ணாகியுள்ள ஷாமிலி ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். முதலில் மலையாளப் படத்திலும் அடுத்து தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

அவரை தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்த ஏகப்பட்ட பேர் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் ஷாமிலியோ கொஞ்சமும் பதட்டப்படாமல், அவசரப்படாமல் படு நிதானமாக வருகிற வாய்ப்புகளை எடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

பெரிய பேனர்களாக இருந்தால், பெரிய நடிகர்களாக இருந்தால், பெரிய பெரிய டெக்னீஷியன்கள் படத்தில் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்புகளை பரிசீலிப்பாராம் ஷாமிலி.

எடுத்த எடுப்பிலேயே டாப்புக்குப் போய் விட வேண்டும் என்ற எண்ணம்தான் ஷாமிலிக்கு. அதனால்தான் சாதாரண பேனர் படங்களாக இருந்தால் ரிஜக்ட் செய்து விடுகிறாராம்.

இப்பவே இப்படியென்றால் பெரிய ஆளாகி விட்டால் என்ன பாடுபடுத்துவாரோ என்ற பயத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X