ஷீலாவின் ஓட்டு கவர்ச்சிக்கே...!

By Staff

Sheela
முன்பு ஹோம்லியாகத்தான் நடித்தேன். ஆனால் அதேமாதிரியான கேரக்டர்கள்தான் தொடர்ந்து வந்தன. முத்திரை விழுந்து விடக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து கிளாமர் வேடங்களில் நடித்து வருகிறேன் என்று வித்தியாசமாக பேசுகிறார் ஷீலா.

இளவட்டம் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் முன்னாள் குழந்தை நட்சத்திரமான ஷீலா. தொடர்ந்து தமிழில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் தெலுங்கில் பிசியாக இருக்கிறார். கவர்ச்சியில் கலக்கியும் வருகிறார்.

மஸ்கா என்ற படத்தில் அவர் மகா கவர்ச்சி காட்டி நடித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் இப்படி கவர்ச்சிக்கே முழுமையாக மாறி விட்டீர்கள் என்று கேட்டால், முன்பு ஹோம்லியாகத்தான் நடித்தேன். ஆனால் அதே மாதிரியான ரோல்கள்தான் தொடர்ந்து வந்தன. முத்திரை விழுந்து விடக் கூடாது என்பதற்காகவே கவர்ச்சியாக நடித்து வருகிறேன்.

இப்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கிறேன். அதில் நயனதாராவும் நடிக்கிறார். அவர் பழக இனிமையானவர்.

இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிக்க நான் தயங்குவதே இல்லை. கதைதான் முக்கியம் என்கிறார் ஷீலா.

சரி, காதல் ஏதாவது என்று இழுத்தால், அதற்கெல்லாம் எங்கப்பா நேரம் இருக்கு என்று அலுத்துக் கொள்கிறார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X