தமிழ் பேச வரும் சுஷ்மிதாவின் சிங்காரி

சந்தியா, தொழில் தாசி என்று தமிழ் டப்பிங்குக்குப் பெயர் வைத்துள்ளனர்.
இதுவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் சவாலான படம் என்று இப்படம் குறித்து கூறியுள்ளார் சுஷ்மிதா சென்.
இயக்குநர் கல்பனா லஜ்மி முதலில் இப்படத்தின் கதையை என்னிடம் கூறியபோது எனக்கு நடிக்கணுமா என்று தோன்றியது. காரணம், வேடம் தாசி என்பதால்.
இருப்பினும் அவர் கதையைக் கூறக் கூற அதில் எனக்கு ஈடுபாடு வந்தது. இதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இப்படத்தி்ல நான் கிராமத்தைச் சேர்ந்த செக்ஸ் தொழிலாளியாக நடித்துள்ளேன். அந்தத் தோற்றம் வர வேண்டும் என்பதற்காக நிலக்கரி, எண்ணெய் உள்பட பலவற்றை எனது உடலில் தேய்த்து நிறத்தை மாற்றினார்கள்.
நடிப்பதை விட இந்த வேட மாற்றம்தான் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. இருப்பினும் இயக்குநர் கொடுத்த ஊக்கத்தால் எளிதாக செய்ய முடிந்தது.
படப்பிடிப்பின்போது நான் உடல் ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நிறைய கஷ்டப்பட்டேன். இப்படி ஒரு கஷ்டமான கேரக்டரை நான் செய்ததே இல்லை.
இது விபச்சாரத்திற்கு எதிரான பிரசாரப் படம் அல்ல. இது ஒரு உண்மைக் கதை. செக்ஸ் தொழிலாளர்களின் நிலை குறித்த கதை. அந்த வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது என்பதை சித்தரிக்கும் கதை.
செக்ஸ் தொழிலாளியாக மட்டுமே பார்க்கப்பட்ட வசந்தி (சுஷ்மிதாவின் கேரக்டர்) காதல் வயப்படும்போது அவளது வாழ்க்கையே மாறிப் போகிறது என்கிறார் சுஷ்மிதா.
இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுஜ் சஹானி, இலா அருண் ஆகியோரும் நடித்துள்ளனர். பூபன் ஹசாரிகா இசையமைத்துள்ளார்.
படத்தில் நடிப்போடு கவர்ச்சியிலும் தாராளம் காட்டியுள்ளாராம் சுஷ்மிதா. ஆடைக் குறைப்பிலும், கவர்ச்சி காட்டுவதிலும் பெரும் புரட்சியே நடத்தியுள்ளாராம்.
இப்படத்தின் தமிழ் வசனத்தை ராஜராஜா எழுதியுள்ளார். அடுத்த மாதம் படத்தை திரைக்குக் கொண்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











