சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் வித்யா பாலன்-தகவல் சேகரிக்கிறார்
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சில்க் வேடத்தில் நடிக்கிறார் வி்த்யா பாலன். கேரக்டரை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அவர் சில்க் பற்றிய விவரங்களை சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழக்கை வரலாற்றை இயக்குநர் மிலுன் லுத்ரியா படமாக எடுக்கிறார். தி டர்ட்டி பிக்சர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இது தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. இதில் சில்க் ஸ்மிதாவாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொணடால் தன் கதாபாத்திரத்தை நன்கு புரிந்து கொண்டு நடிப்பவர் வித்யா. அவர் நடித்துக் கொண்டிருக்கும் நோ இன் கில்ட் ஜெசிகா என்ற படம் வட இந்தியாவில் பெண்கள் மர்மமான முறையில் இறந்ததை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்திற்காக அவர் மர்மமான முறையில் இறந்த இளம்பெண்களின் வீட்டுக்கு சென்று அவர்களின் உறவினர்களிடம் தகவல் சேகரித்தார்.
தற்போது சில்க்காக நடிக்கவுள்ள அவர், சில்க் பிறந்த ஆந்திர மாநிலம் செல்ல வித்யா திட்டமிட்டுள்ளார். அங்கு சில்க் பிறந்த ஊரான எலுரு, சில்க் படித்த பள்ளிக்கு செல்கிறார். மேலும், சில்க்கின் ஆசிரியர்களையும் நேரில் சந்திக்கவிருக்கிறார்.
இது தவிர சில்க்கின் மேனரிசம், அவர் பற்றி வந்த கிசுகிசு எல்லாம் பற்றி தகவல் சேகரித்து வருகிறார். இதெல்லாம் சில்க் மாதிரியே நடிக்க பெரிதும் உதவும் என்று கருதுகிறார் வித்யா.
ஆந்திரா மட்டுமின்றி சென்னைக்கும் வந்து சில்க்கிடம் நட்பாக பழகியவர்களையும் சந்தித்து பேசுகிறார்.
என்னமோ போங்க, படம் வந்தா தான் தெரியும்!


Click it and Unblock the Notifications











