போலிப் பத்திரம்-பிரியங்கா சோப்ரா வீட்டை அபேஸ் செய்ய முயன்ற வாடகைதாரர்!!

விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டின் முன்னணி நாயகி. இவருக்கு மும்பை ஓஷிவாரா பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்று உள்ளது.
இந்த வீட்டை அவர் ராகேஷ் கபூர் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு விட்டிருந்தார்.அவரை வீட்டை காலி செய்யும்படி பிரியங்கா கேட்டுக் கொண்டார். ஆனால் காலி செய்ய மறுத்த ராகேஷ் கபூர் இந்த வீடு எனக்கு சொந்தமானது என்று வாதிட்டார்.
இதற்கான பத்திரங்களையும் அவர் பிரியங்காவிடம் காண்பித்தார். அவர் போலிப் பத்திரம் தயாரித்து வீட்டை சொந்த மாக்கி கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து பிரியங்கா சோப்ரா போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் ராகேஷ்கபூர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கை விசாரிச்ச மும்பை செசன்ஸ் நீதிமன்றம், அடுத்த 15 தினங்களில் ப்ரியங்காவுக்கு சேர வேண்டிய வாடகையை முழுமையாக செலுத்த வேண்டும் என ராகேஷ் கபூருக்கு உத்தரவிட்டுள்ளது. தவறினால் நடவடிக்கை நிச்சயம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











