2019ன் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த அழகிகள்!
சென்னை: வழக்கம் போல 2019ம் ஆண்டிலும் இளைஞர்கள் மனதை திருடிய பல நடிகைகள் இருக்கவே செய்தனர்.
2019ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் பல படங்கள் வெளியானது, பல வெற்றி பெற்றன சில தோல்வி அடைந்தன. ஆனால் படங்கள் தோல்வி அடைந்தாலும் ரசிகர்கள் எப்போதும் கொண்டாடி கொண்டே இருபவர்கள் நடிகைகள் தான்.
அப்படி ரசிகர்கள் மனதை திருடி ரசிகர்களால் இவர் தான் எனது க்ரஷ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்த சில 2019ன் நடிகைகளை பற்றிய தொகுப்பு தான் இது. க்ரஷ் என்பதற்கு ஒரு பாலினத்தின் மீது தனக்கு காதல் ஆர்மபமாகி இருப்பதை மனிதர்கள் குறிக்கும் ஒரு ஆங்கில சொல்லாகும். அப்படி 2019ன் தமிழக இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்த க்ரஷ் லிஸ்ட் இதோ.

மாளவிகா மோகனன்
ஸ்டைலிஸ் மற்றும் ஹாட் போட்டோசூட்கள் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் தான் மாளவிகா மோகனன் .பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அதற்கு பிறகு இவரின் போட்டோக்கள் சமூக வளைத்தலங்களில் வைரலாகிய இடமே வேறு என்று சொல்லலாம் .ஏன் மாளவிகா தற்போது தளபதி படத்தில் இனைந்தது கூட சமூக வளைத்தலங்களில் பிரபலமாகிய பின்பு தான் .மாளவிகா இளைஞர்கள் மனதை எந்த அளவுக்கு கொள்ளை அடித்து இருக்கிறார் என்றால் நேர்காணல் ஒன்றில் மளவிகா தொகுப்பாளருக்கு முத்தம் கொடுக்க அந்த தொகுப்பாளரை வருத்து எடுத்து ஆத்திரத்தை தீர்த்து கொண்டனர் மாளவிகாவின் ஒரு தலை காதலர்கள்.அந்த அளவுக்கு மாளவிகா மீது தற்போதைய இளைஞர்களுக்கு க்ரஷ் ஏற்பட்டு விட்டது.

காஷ்மீரா
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் அறிமுகமான காஷ்மீரா தனது சின்னஞ்சிறு சிரிப்பின் மூலம் இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் .அவரின் சின்ன சிரிப்புக்கும் வெட்கத்திற்கும் மட்டுமே பல ரசிகர்கள் இவர் நடித்த படத்தை கொண்டாடினர் .பலர் தங்களின் போன் முதல் கணினி வரை இவரின் சின்னச்சிரிப்பின் போட்டோக்களை வைத்து அழகு பார்த்து வருகின்றனர் .2019ல் தமிழில் அறிமுகமாகிய நடிகைகளில் இவர் முக்கியமானவர்

சம்யுக்தா
பாலு மஹேந்திரா பட நாயகிகளை போல மாநிறம் கொண்ட சம்யுக்தா கோமாளி மற்றும் பப்பி படங்களின் மூலம் இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர் .கோமாளிக்கு முன் சம்யுகதா சில படங்களில் நடித்து இருந்தாலும் .அவர் கோமாளி படத்தில் நடித்த பள்ளி மாணவி கதாபாத்திரம் இளைஞர்களை முக்கியமாக 90ஸ் இளைஞர்களை கட்டி போட்டது .எப்போதும் மாநிறப் பெண்களுக்கு தமிழ் திரையுலகில் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

சில்பா மஞ்சுநாத்
ஒரே பாடல் ஒரே படம் என சட்டென்று பிரபலமடைந்த நாயகி சில்பா மஞ்சுநாத். காளி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .ஆனாலும் இஸ்பேட்ராஜாவும் இதய ராணியும் படத்தில் இவர் நடித்த தாரா கதாபாத்திரம் பல இளைஞர்களை கட்டிபோட்டது முக்கியமாக இந்த படத்தில் வர கூடிய கண்ணமா பாடல் இன்று வரை இளைஞர்களின் பிடித்தமான பாடல் அந்த பாடலில் தாரா பார்வையில் விழுந்த இளைஞர்களை இன்றும் மீட்க முடியவில்லை. இவர் 2019ன் முக்கிய க்ரஷ்ஷாக பார்க்க படுகிறார்.

ரம்யா பாண்டியன்
2019ல் இவர் படம் நடிக்க வில்லை என்றாலும் இவர்தான் இளைஞர்களின் இதயத்தை கொள்ளை அடித்து இளைஞர்களின் க்ரஷ்ஷாக உருவெடுத்து உச்சத்தில் போனவர் .அவர்தான் ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இடுப்பழகை வைத்து எடுக்கபட்ட போட்டோ மூலம் பிரபலம் அடைந்து தற்போது பல வாய்ப்புகள் இவரை தேடி வந்து கொண்டிருக்கிறது . ரம்யா பாண்டின் என்றவுடன் அவர் பச்சை நிற சேலையில் எடுத்த போட்டோ தான் அனைத்து இளைஞர்கள் மனதிற்கும் வரும் .தற்போது இந்த ஒரு போட்டோ மூலம் இவர் விஜய் டீவியில் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பல பிரபலங்களுடன் பங்கு கொள்ளும் அளவிற்கு பிரபலமடைந்து விட்டார் அதற்கு முக்கிய காரணம் இவரின் ஒரு தலை காதலர்களான இளைஞர்கள் தான் .

அம்ரிதா
பிகில் படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் அம்ரிதா ,ஒரு கால்பந்து வீராங்கனையாகவும் தைரியமான பெண்ணாகவும் நடித்து இருந்தார் அம்ரிதா ,இவரின் நடிப்பு பிடித்த ரசிகர்கள் இப்படி பட்ட பெண்தான் தனக்கு காதலியாக வர வேண்டும் என்று அம்ரிதாவை தங்களின் க்ரஷ்ஷாக ஏற்று கொண்டனர் .

அதுல்யா ரவி
இவருக்கு 2019ல் இரு படங்கள் ,அந்த இரு படங்களுமே தோல்வி என்றாலும் கூட இவரின் சமூக வலைத்தள ரசிகர்கள் பல லட்சம் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றனர் .காதல் கண் கட்டுதே மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த அதுல்யா அதற்கு பின் பல படங்களில் தோல்வியே சந்தித்து வந்தாலும் இவர் தான் சமூகவளைத்தலத்தில் டாப் அந்த அளவுக்கு ரசிகர்கள் ஆதரவு இவருக்கு இருக்கிறது .கிட்டத்தட்ட 13லட்சம் ரசிகர்களை தான்டி தற்போது தமிழக இளைஞர்களின் டாப் க்ரஷ்ஷாக அதுல்யா இருக்கிறார் .

ஆயுள் கால கிரஸ்கள்
தமிழக இளைஞர்கள் இந்தந்த நடிகைகளை தான் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பின் தொடர்ந்து உள்ளனர் .எப்போதும் தமிழ் சினிமாவை பொருத்தவரை படத்தோல்வி ஒரு நடிகரை தான் பாதிக்குமே தவிர நடிகைகளை அல்ல அது ஒரு விதத்தில் நன்மையாக இருந்தாலும் இன்னும் தமிழ்சினிமாவில் ஹீரோயின்களின் பங்கு குறைவு என்பதையே காட்டுகிறது .லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் த்ரிஷா எல்லாம் இளைஞர்களின் ஆல்டைம் க்ரஷ் என்பதால் அவர்களை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை .2019ல் இவர்கள் தான் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட டாப் கிரஷ்கள்.


Click it and Unblock the Notifications











