ட்விட்டர் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்…. கீர்த்தி சுரேஷ் முதலிடம்… நயன்தாரா பெயரே இல்லை !

சென்னை : 2021 ஆம் ஆண்டு முழுவதும் டிவிட்டரில் அதிகம் பதிவிட்டப்பட்ட தென்னிந்திய நடிகைகள் லிஸ்டை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் கீர்த்தி சுரேஷின் பெயர் இடம் பெற்றுள்ளது. 10வது இடத்தில் அனுபமா பரமேஸ்வரின் பெயர் இடம் பிடித்துள்ளது.

அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் டாப் 10 லிஸ்டில் நயன்தாராவின் பெயர் இல்லாதது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டாப் 10 லிஸ்ட்

டாப் 10 லிஸ்ட்

வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் அந்த ஆண்டு முழுவதும் நடந்த மறக்க முடியாத பல சுவாரசியமான நிகழ்வுகளை அசைபோடுவது வழக்கம். அந்த வகையில் சினிமா துறையில் இந்த ஆண்டு தேசிய அளவில் மற்றும் தென்னிந்திய அளவில் முதல் இடம் பிடித்த நடிகர்கள், நடிகைகளின் டாப் 10 லிஸ்டை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் முதலிடம்

கீர்த்தி சுரேஷ் முதலிடம்

இதில், பல முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் முதலிடம் பிடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அண்ணன் தங்கை செண்டிமெண்ட் கொண்ட இந்த திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ட்விட்டரில் அதிகம் பேசப்பட இப்படம் ஒரு முக்கிய காரணம் எனலாம்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

3ம் இடம்பிடித்த சமந்தா

3ம் இடம்பிடித்த சமந்தா

சமந்தாவுக்கு 2021ம் ஆண்டு ஒரு சர்ச்சைக்குரிய ஆண்டாகவே அமைந்தது. விவாகரத்து சர்சையில் சிக்கி அதிகம் பேசப்பட்ட சமந்தா 3வது இடத்தை பிடித்துள்ளார். காஜல் அகர்வால் 4வது இடத்தையும், மாளவிகா 5வது இடத்தையும், ரகுல் ப்ரீத்திற்கு 6வது இடமும், சாய் பல்லவி, தமன்னா 7 வது மற்றும் 8வது இடத்தையும், அனுஷ்கா ஷெட்டி, அனுபமா பரமேஸ்வரன் 9 மற்றும் 10வது இடத்தையும் பிடித்துள்ளார்.

Recommended Video

தடுப்பூசி கண்டிப்பா போடுங்க | Actress Keerthy Suresh Awareness Video | Vaccine
டாப் 10ல் பெயர் இல்லை

டாப் 10ல் பெயர் இல்லை

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவின் பெயர் டாப் 10லிஸ்ட் இல்லாததால் அவரின் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். நயன்தாராவின் நடிப்பில் நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த வெளியான நிலையில் அவரின் பெயர் முதல் பத்தில் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X