2023 Highest Paid Actress: நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் த்ரிஷா... அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்

சென்னை: கோலிவுட்டில் 2023ம் ஆண்டும் வழக்கம் போல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் தனிக்காட்டு ராணியாக வலம் வருகிறார். அவரது படங்கள் ஓடவில்லை என்றாலும் சம்பள விஷயத்தில் இன்னும் உச்சத்தில் இருப்பது அவர் தானாம். ஆனால், நயனுக்கு டஃப் கொடுத்து வருகிறார் பொன்னியின் செல்வன் குந்தவையான த்ரிஷா.

நயனுக்கு டஃப் கொடுக்கும் த்ரிஷா: கோலிவுட்டில் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் நாயகிகளும் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். முன்பெல்லாம் லட்சங்களில் சம்பளம் வாங்குவதே பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது கோடிகளில் குவித்து வருகின்றனர். அந்த வகையில் 2023ம் ஆண்டும் நயன்தாரா தான் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாஸ் காட்டி வருகிறார்.

 2023 Highest-Paid Actress: Nayanthara and Trisha are among the highest paid actresses in Kollywood

ஐயா படத்தில் அறிமுகமான நயன், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகிவிட்டார். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, சூர்யா என டாப் ஹீரோக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் நயன் தான் மோஸ்ட் வான்டட் நாயகி. கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா, ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். சமீப காலங்களாக நயனின் படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லையென்றாலும் சம்பள விஷயத்தில் அவர் தான் டாப்பில் உள்ளார்.

இந்த லிஸ்ட்டில் நயனுக்கு டஃப் கொடுக்கும் ஒரே நடிகை த்ரிஷா மட்டுமே. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து கம்பேக் கொடுத்தார் த்ரிஷா. அதன்பின் விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என நயன்தாரா விட்ட இடத்தை விரட்டிப் பிடித்துள்ளார் த்ரிஷா. முக்கியமாக சமீப காலங்களில் த்ரிஷா நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதன்படி, அவர் ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

நயன், த்ரிஷா வரிசையில் இந்த பட்டியலில் சாய் பல்லவி 3ம் இடம் பிடித்துள்ளார். சமந்தா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரை பின்னுக்குத் தள்ளியது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி, மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளாராம். இவர் ஒரு படத்துக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஷ்மிகா மந்தனா, சமந்தா இருவரும் முறை 4வது, 5வது இடங்களை பிடித்துள்ளனர். டோலிவுட், பாலிவுட் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை விட தமிழில் குறைவாகவே சம்பளம் வாங்குகிறாராம் ரஷ்மிகா. அதன்படி ஒரு படத்துக்கு 4 கோடி ரூபாய் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சமந்தா ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறாராம். சில ஆண்டுகளாக அவர் அதிக படங்களில் நடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படத்துக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், பிரியங்கா மோகன் 1.25 கோடி சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமன்னா ஒரு கோடியும், பிரியா பவானி சங்கர் 60 லட்சமும், தளபதி 68 நாயகி மீனாட்சி செளத்ரி 50 லட்சமும் சம்பளமாக வாங்குகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X