வேலுவுக்கு எதிராக பாக்யாஞ்சலியிடம் ஆதாரம் இல்லை?

By Sudha

வில்லன் நடிகர் வேலுவுக்கு எதிராக பல்வேறு புகார்களைக் கூறிய கேரள நடிகை பாக்யாஞ்சலி அதற்கு ஆதாரங்கள் எதையும் இதுவரை போலீஸாரிடம் கொடுக்கவில்லை. மேலும் பிடிப்பில்லாமல் அவர் பேசி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு வக்கீலின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் இந்த வழக்கு குறித்து ஒரு முடிவுக்கு வர போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தொந்தரவு செய்தார், எஸ்.எம்.எஸ். கொடுத்துத் தொல்லை செய்தார், வீட்டில் அடைத்து வைத்து அடித்தார் என்பது உள்பட பல்வேறு புகார்களைக் கூறினார் நடிகை பாக்யாஞ்சலி.

இதையடுத்து கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று உடனடியாக போலிஸில் ஆஜரான நடிகர் வேலு, பாக்யாஞ்சலி என்னிடம் ரூ. 40,000 கடன் வாங்கியிருந்தார். திருப்பிக் கேட்டதால் பொய்யான புகார்களைக் கொடுத்துள்ளார். மேலும் அவர்தான் என்னைக் காதலிப்பதாக எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார் என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதையடுத்து இருவரையும் வேப்பேரி போலீஸார் நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது இருவரிடமும் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது பாக்யாஞ்சலி திணறியதாக கூறப்படுகிறது. மேலும், வேலுவுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு போலீஸார் கேட்டபோது இல்லை என்று பாக்யாஞ்சலி கூறினாராம். மேலும், வேலு தனக்கு அனுப்பியதாக கூறப்படும் எஸ்.எம்.எஸ்களை அழித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேலுவுக்கு எதிரான புகார்கள் தொடர்பான ஆதாரங்கள் குறித்து உறுதிபட அவரால் தெரிவிக்க முடியவில்லையாம்.

இதையடுத்து அரசு வக்கீலின் ஆலோசனையைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X