ஹன்சிகா 'கேஷ்' வானி!
ஹன்சிகா மோத்வானி ஏகப்பட்ட செலவு வைப்பதாக கோலிவுட்டில் முனுமுனுப்பு கிளம்பியுள்ளது.
மும்பையிலிருந்து தமிழுக்கு வந்துள்ள புதிய வரவு ஹன்சிகா மோத்வானி. வந்து ஒரு படம் கூட இன்னும் முழுசாக அவருக்குப் பெயர் வாங்கித் தரவில்லை. அதற்குள் ஏகப்பட்ட கெட்ட பெயர்களை சம்பாதிக்க ஆரம்பித்துள்ளாராம்.
அதில் முக்கியமானது குண்டக்க மண்டக்க தயாரிப்பாளருக்குசெலவு வைத்து விடுகிறார் என்பது. படப்பிடிப்புக்கு வரும்போதெல்லாம் பெரிய கூட்டத்தை தன்னுடன் கூட்டி வருகிறாராம் ஹன்சிகா. இதனால் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட எக்ஸ்டிரா செலவுகளாம்.
இவருக்குத் தரும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அவருடன் வரும் உருப்படிகளுக்குத் தர வேண்டியுள்ளதாக புலம்புகிறார்கள்.
பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் என பெரும் டிக்கெட்களுடன் வந்து இறங்கும் ஹன்சிகா, அத்தனை பேரையும் தன்னுடனேயே நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துக்கொள்கிறாராம். அதற்கான பில்லை தயாரிப்பாளர்தான் கட்ட வேண்டியுள்ளதாம்.
இருந்தாலும் இத்தனை கஷ்டங்களையும் ஏன் தயாரிப்பாளர்கள் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்றால் ஹன்சிகா படப்பிடிப்புகளில் எந்தப் பிரச்சினையும் செய்யாமல், நல்ல ஒத்துழைப்பு தருகிறார் என்பதால்தானாம். இருந்தாலும் விலைவாசி இருக்கும் நிலையில் ஹன்சிகா இப்படியே தொடர்ந்தால் தாங்குவது கஷ்டம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில்.


Click it and Unblock the Notifications











