கேன்சரால் கவலை இல்லை-மமதா மோகன்தாஸ்

By Sudha

Mamta Mohandas
எனக்கு வந்த புற்றுநோய் குறித்து நான் கவலைப்படவில்லை என்கிறார் நடிகை மமதா மோகன்தாஸ்.

சமீப காலமாக தனது ஹேர்ஸ்டைலை மாற்றி நடமாடி வந்தார் மமதா. இதுகுறித்து அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியம். ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் தனக்கு புற்று நோய் என்பதைத் தெரிவித்துள்ளார் மமதா.

இதுகுறித்து அவர் கூறுகையில், புற்று நோய் என்று தெரிய வந்ததும் நான் பயந்து போய் விடவில்லை. உடனடியாக சிகிச்சைக்குப் போய் விட்டேன். கீமோதெரபி காரணமாக தலைமுடியை எடுக்க நேரிட்டது. தற்போது சிகிச்சை முடிந்து புத்துணர்ச்சியுடன் உள்ளேன்.

புது பிறப்பு எடுத்தது போல உணர்வதால், எனது ஹேர் ஸ்டைலையும் மாற்றி விட்டேன்.

கடந்த சில மாதங்கள் எனக்கு மிகவும் கடுமையானதாக இருந்தது. அதை எதிர்த்து நான் போராட வேண்டியதிருந்தது. இருந்தாலும் நான் அஞ்சவில்லை.

தமிழில் வாய்ப்புகள் வரவில்லையே என்று நான் கவலைப்படவில்லை. வாய்ப்பு வரும்போது நடிப்பேன். அதுவரை மலையாளத்தில் மட்டும் நடிப்பேன் என்கிறார் மமதா.

தற்போது நான்கு மலையாளப் படங்களில் நடித்து வருகிறாராம் மமதா.

அன்வர் என்ற படத்தில் நடித்துள்ள மமதா அதன் வெற்றியால் குஷியாகியுள்ளார். தற்போது நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து ஒரு வீடியோ ஆல்பம் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X