சோனியாவின் முட்டாள்தனமான முடிவுகள்! - ரோஜா தாக்கு

By Shankar

Roja
ஹைதராபாத்: ஆந்திர அரசியலில் சோனியா காந்தி எடுத்து வரும் முடிவுகள் முட்டாள்தனமானவை என நடிகை ரோஜா கூறியுள்ளார்.

ஆந்திராவில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் அளிக்கக்கோரி ஜெகன்மோகன்ரெட்டி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டு பேசியதாவது:

ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் முதல்வராக இருந்தபோது சோனியா- ராகுல் காந்திக்கு நல்ல செல்வாக்கை உருவாக்கி வைத்தார். அவரது மரணத்திற்கு பின் சோனியா எடுத்த தவறான முடிவுகளால் காங்கிரஸ் மட்டுமல்ல, சோனியா - ராகுல் செல்வாக்கும் அடியோடு சரிந்துவிட்டது.

நானும் சோனியாவை மிகப்பெரிய புத்திசாலியான தலைவர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஆந்திர அரசியலில் எடுத்து வரும் நடவடிக்கைகள் முட்டாள்தனமாக உள்ளன.

மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியை பதவி விலகச் செய்து ஆந்திராவில் காங்கிரசை ஒழித்து விட்டார். தற்போது கிராமப்புறங்களில் காங்கிரசுக்கு தொண்டர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்கு ஒரு ஏஜெண்டுக்கு கூட ஆள் இல்லாத நிலை. பீகாரில் காங்கிரஸ் பெற்ற தோல்விதான் அடுத்த தேர்தலில் இங்கும் கிடைக்கும்.

தற்போது மந்திரி பதவியில் உள்ளவர்கள் கூட பதவிக் காலம் முடிந்ததும் ஜெகன் பக்கமே வந்து விடுவார்கள். இனி சோனியா- ராகுல் காந்தியால் ஆந்திராவில் செல்வாக்குப் பெற முடியாது", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X