ஷம்மு மட்டுமே...!

மலையாளத்திலிருந்து காஞ்சிவரம் வழியாக கோலிவுட்டுக்கு வந்தவர் ஷம்மு. முதல் படத்தில் நல்ல நடிகையாக அடையாளம் காணப்பட்டவர் இப்போது கவர்ச்சிக் களத்திதற்கும் தயாராக நிற்கிறார்.
ஷம்மு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு குறிப்பை விடுத்துள்ளார். அது ரசிகர்களுக்கானது.
அதில், எனது பெயர் ஷம்மு ஷிரீன். இருந்தாலும் ஷம்மு என்பது இந்திய ரசிகர்களுக்கு மட்டும். இங்கு என்னை ஷம்மு என்று கூப்பிட்டால் போதுமானது. ஷீரின் என்று எனது அமெரிக்க நண்பர்கள் கூப்பிடுகிறார்கள். அதுதான் அவர்களுக்கு வசதியானதாக தோன்றுகிறது.
எனவே இந்தியாவுக்கு ஷம்மு, அமெரிக்காவுக்கு ஷீரின் என நானே பிரித்து வைத்து விட்டேன் எனது பெயரை என்று கூறியுள்ளார்.
ஷம்மு சொல்வதும் சரிதான். ஷீரின் என்று கூப்பிட்டால் பிறகு நடிகை ஷெரீன் ஞாபகம் வந்து விடுமே!
Comments
actress shammu sheerin american friends அமெரிக்க தோழர்கள் இந்திய ரசிகர்கள் நடிகை ஷம்மு ஷீரின் ஷம்மு indian fans shammu


Click it and Unblock the Notifications