நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்-திருமணம் குறித்து தீபிகா

நடித்து வெளி வந்த படங்கள் கொஞ்சம்தான். ஆனால் தீபிகா குறித்து நிறைய செய்திகள். காதல், காதல் ரத்து, மறுபடியும் காதல் என்று ஏகப்பட்ட காதல் கிசுகிசுக்கள் இந்த கன்னத்து குழியழகி குறித்து.
சமீப காலமாக விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன், தீபிகா நெருக்கமாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. சமீபத்தில் சித்தார்த் மல்லையா தலைமையில் நடந்த கிங்பிஷர் காலண்டர் அறிமுக விழாவில் தீபிகா படுகோனே கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், திருமணம் என்பது யாராலும் திட்டமிட முடியாது. அது நடக்க வேண்டிய நேரத்தில், கரெக்டா நடக்கும் என்று 'சூப்பர் ஸ்டார்' ஸ்டைலில் பதில் கூறினார்.
தீபிகாவும், சித்தார்த் மல்லையாவும் காதலிப்பது உலகறிந்த செய்தி. இதை அவர்கள் என்னதான் மறைத்து வைக்க முயன்றாலும் முடியவில்லை, பொங்கி வெளியே வந்து விடுகிறது. தீபிகா எங்கு சென்றாலும் சித்தார்த் இல்லாமல் போவதில்லை. அப்படி போனாலும், பின்னாடியே சித்தார்த்தும் வந்து விடுகிறாராம்.
நட்சத்திர ஹோட்டல்களில் இருவரும் ஜோடியாக நடனம் ஆடுகின்றனர். இதை விட இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, தீபிகா ஒல்லியாக இருப்பதால் அவருக்கு சரியான ஜோடியாக இருப்பதற்காக சித்தார்த் பல கிலோ குறைத்துள்ளார் என்பதே போதுமானது.
ஸ்டைலா பதில் சொல்றதெல்லாம் இருக்கட்டும், கடைசியில் நாங்கள் வெறும் நண்பர்கள் தான் எனறு சொல்லாம இருந்தால் சரிதான்.


Click it and Unblock the Notifications











