'டிமிக்கி' அடித்த திரிஷா-'ஆத்திரத்தில்' அக்ஷய் குமார்!

பிரியதர்ஷன் இயக்கி, அக்ஷய் குமார் சொந்தமாக தயாரித்துள்ள படம்தான் கட்டா மீத்தா. இதில் நாயகியாக நடித்துள்ளார் திரிஷா. இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி விட்டது. படத்தை விளம்பரம் செய்து வியாபாரத்தை கூட்டும் வேலைகளில் அக்ஷய் குமார் தீவிரமாக உள்ளார்.
பாலிவுட்டில் ஒரு படம் முடிந்தவுடன் அதை 'போணி'யாக்குவதற்காக ஹீரோவும், ஹீரோயினும், இயக்குநரும் கூட்டாக ஆங்காங்கு போய் விளம்பரம் செய்வது வழக்கம். அதேபோல படம் தொடர்பான பேட்டிகள், டிரெய்லர் வெளியீடு, ஸ்பெஷல் காட்சிகள் என எது நடந்தாலும் இந்த மூன்று பேரும் அவசியம் இருந்தாக வேண்டும். குறிப்பாக ஹீரோயின் இருக்க வேண்டியது 'மஸ்ட்'.
ஆனால் திரிஷா இந்த பாலிவுட் 'எத்திக்ஸை' மீறி விட்டாரம். படம் முடிந்த கையோடு கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்திற்காக கிளம்பிப் போய் விட்டார். இதனால் அக்ஷய் குமார் கடுப்பாகி விட்டார்.
அக்ஷய் குமார் மட்டுமல்லாமல் பிரியதர்ஷனுக்கும் கூட இதில் கொஞ்சம் கோபமாம். முதல் படம் நன்றாக வர வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி கூட திரிஷாவுக்கு இல்லையே என்று இருவரும் கோபத்தில் புலம்பி வருகிறார்களாம்.
அது சரி, ஒரு வேலை முடிஞ்சா அடுத்த வேலைக்கு போய்த்தானே ஆகனும் குமார்ஜி!


Click it and Unblock the Notifications











