மருமகனுக்கு அம்மாவாகும் டிம்பிள்!

இதை டிம்பிள் கபாடியாவே நினைவு கூர்ந்து, அப்படி மட்டும் நான் நடித்திருந்தால் எவ்வளவு சங்கடமாக போயிருந்திருக்கும் என்கிறார். அன்று டிம்பிள் மறுத்த அந்த கேரக்டரில் பின்னர் ரேகா நடித்தார் என்பது வரலாறு.
இன்று டிம்பிளின் மருமகனாக இருக்கிறார் அக்ஷய். தனது மாமியார் டிம்பிளுடன் இணைந்து பாட்டியாலா ஹவுஸ் படத்தில் நடிக்கிறார் அக்ஷய். இதில் அவரது அம்மாவாக வருகிறாராம் டிம்பிள். அப்பாவாக வருபவர் ரிஷி கபூர்.
ரிஷி கபூரும், டிம்பிளும் இந்தித் திரையுலகில் மறக்க முடியாத ஒரு ஜோடி. இந்த ஜோடி நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது.
முதல் படமான பாபிக்குப் பின்னர், சாகர் படத்தில் ரிஷியும், டிம்பிளும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் சமீபத்தில் வெளியான பியார் மெய்ன் ட்விஸ்ட் படத்தில் இணைந்தனர். இப்போது நான்காவது முறையாக ஜோடி போடுகின்றனர்.
இப்படத்தில் சீக்கியராக நடிக்கிறார் அக்ஷய். ஆனால் டர்பன் கட்டிக் கொள்ளாமலேயே நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக வருபவர் அனுஷ்கா சர்மா. ரப் னே பனா தி ஜோடி படத்தில் ஷாருக்குடன் ஜோடி போட்டவர் இப்போது அக்ஷயுடன் இணைகிறார். இவரது முதல் படத்தில் நடிப்பையும், நடனத்தையும் பார்த்து வியந்து போயிருந்த அக்ஷய்தான், பாட்டியாலா ஹவுஸ் படத்தில் தனது ஜோடியாக அனுஷ்காவை பரிந்துரைத்தாராம்.
படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக இருப்பதாக இயக்குநர் நிகில் புகழ்கிறார்.


Click it and Unblock the Notifications











