அடிதடி வழக்கில் கங்கனா

By Staff

Kangana Ranaut
பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தும், அவரது சகோதரியும் சேர்ந்து கங்கனாவின் கார் டிரைவரை அடித்து உதைத்ததாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனவத். தமிழில், ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கும், ரனவத்துக்கும் இடையே காதல் இருப்பதாகவும் ஒரு கிசுகிசு கோலிவுட்டில் உள்ளது.

இந்த நிலையில் தனது கார் டிரைவரை போட்டு அடித்து விட்டதாக கங்கனா மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கார் டிரைவர் ராஜேஷ் குமார் ஷார, மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், மார்ச் 9ம் தேதி தன்னை, கங்கனாவும், அவரது சகோதரியும் சேர்ந்து அசிங்கமாக பேசி அடித்து உதைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாகவேத கார் டிரைவர் காரை ஓட்டுவது குறித்து கங்கனா அதிருப்தியுடன் இருந்தாராம். அடிக்கடி அவரை திட்டுவதும் வழக்கமாம். இந்த நிலையில் வெர்சோவாவில் நடந்த படப்பிடிப்புக்காகப் போன இடத்தில் ஷாவை ரனவத் சகோதரிகள் அடித்து விட்டதாக ஷா கொடுத்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கனாவின் சகோதரியான ரங்கோலி ரனவத், தனது கன்னத்தில் பளார் என அடித்ததாகவும் தனது புகாரில் ஷா குறிப்பிட்டுள்ளார்.

புகாரைப் பரிசீலித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X