நீச்சல் உடையில் நடிப்பது தப்பு அல்ல! - பதினாறு அடி பாயும் கார்த்திகா

By Shankar

தெலுங்கு, மலையாளம் என முட்டி மோதி, தோல்விகளை மட்டுமே சந்தித்த ராதா மகள் கார்த்திகா, இப்போது தனது முதல் தமிழ்ப் படத்துக்கான 'பில்டப்'பை ஆரம்பித்துள்ளார்.

மாஜி நடிகை ராதா 16 வயதில் நீச்சலுடையில் அறிமுகமானார் அலைகள் ஓய்வதில்லை படத்தில் (ஒரு காட்சியில அதுகூட இல்லை!). ஆடி ஓடி ஓய்வு பெற்று திருமணமாகி செட்டிலான ராதா, தனது மூத்த மகளை தான் தொழில் கற்ற அதே 16 வயதில் சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டார்.

ஆனால் ஆரம்பத்தில் இவரை தமிழில் மட்டும் அறிமுகம் செய்யவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார் ராதா. இதை ஹைதராபாத் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே சொன்னார். தெலுங்கு சினிமாவை இமாலய உயரத்துக்கு உச்சத்தில் வைத்துப் பேசினார் அந்த நிகழ்ச்சியில்.

அந்தப் படம் படுதோல்வியடைய, கார்த்திகாவை பேக்கப் சொன்னது டோலிவுட். அடுத்து தாய் மொழி மலையாளத்துக்குப் போனார். அங்கும் இதே நிலை.

இப்போது, எந்த தமிழ்ப் பட உலகம் வேண்டாம் என ராதா சொன்னாரோ, அதே கோடம்பாக்கத்தில் குப்பை கொட்ட வேண்டிய நிலை ராதாவுக்கும் அவர் மகளுக்கும்!

தமிழில் கார்த்திகா நடித்த கோ படம் இப்போது திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்துக்கான விளம்பர பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வழக்கம்போல 'ஆரம்பித்தார்கள்' ராதாவும் அவர் மகளும்.

கோ படத்தை தியேட்டரில் பார்க்கும்போது என்னை ஒரு சாதாரண புதுமுகமாக நினைத்துக்கொள்ளுங்கள். ராதா-அம்பிகாவின் மகள் (?!) என்ற நினைப்போடு படம் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட கார்த்திகா, எங்கம்மா முதல் படத்திலேயே நீச்சலுடையில் நடிச்சாங்க. நானும் நீச்சல் உடைக்கும், கதைக்குத் தேவையென்றால் அதைவிட கவர்ச்சியாகவும் நடிக்கத் தயார், என்றார்.

கூடவே இருந்த ராதா, "செய்யும் தொழிலை கடவுளாக மதிக்க வேண்டும். தொழில் சொல்லிக்கொடுத்த குருவை வணங்க வேண்டும். எப்போது 'ஷாட்' எடுப்பார்கள் என்று யாரிடமும் விசாரிக்கக்கூடாது..." என்றெல்லாம் மகளுக்கு அட்வைஸ் செய்திருப்பதாக சொல்லிக் கொண்டே போக, நிருபர்கள் 'எஸ்கேப்!'

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X