கத்ரீனா கைப் காரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!

By Chakra

அஜ்மீர் தர்காவுக்கு வந்த பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் காரை அடித்து நொறுக்கினர் ரசிகர்கள்.

பிரபல இந்தி நடிகை கத்ரினாகைப். இவர் தனது படங்கள் வெற்றி பெற ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

தற்போது அவர் நடித்துள்ள தீஸ் மார் கான் படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக அஜ்மீர் தர்காவுக்கு வந்தார் கதரீனா. அவர் வருவதை அறிந்து தர்கா எதிரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர்.

அவர்கள் கத்ரினா காரைப் பார்த்ததும் ஆரவாரம் செய்தபடி சுற்றி வளைத்தனர். இதனால் கார் முன்னால் நகர முடியவில்லை. கத்ரினாவுக்கு பாதுகாப்பாக வந்தவர்கள் கூட்டத்தினரை அப்புறப்படுத்த முயன்றனர். முடிய வில்லை.

திடீரென்று ரசிகர்கள் கத்ரினாவை கீழே இறங்கு மாறு காரை தட்டி வற் புறுத்தினர். ஆனால் கத்ரினா வெளியே வர வில்லை. இதனால் ஆவேசமாகி காரை அடித்து உடைத்தனர். நிலைமை மோசமானதால் கத்ரினா தர்காவுக்கு செல்லாமல் ஓட்டலுக்கு திரும்பினார்.

இதுபற்றி தர்கா நிர்வாகத்தினர் கூறும் போது, ஏற்கனவே பலமுறை கத்ரினாகைப் தர்கா வந்து வழிபட்டுள்ளார். அப்போதெல்லாம் கூட்டம் குறைவாக இருந்ததால் பிரச்சினை எழவில்லை. ஆனால் தற்போது எதிர்பாராமல் பெருங்கூட்டம் கூடியது. இதனால்தான் இந்தப் பிரச்சினை, என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X