Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
லேட்டஸ்ட் 'மந்திரா பேடி' லேகா!
முன்னாள் விஜே ஆன லேகா, சிம்புவின் கெட்டவன் படத்தில் நடிப்பதாக இருந்தது. சில காட்சிகளையும் எடுத்து முடித்த பின்னர் திருப்தி வராததால் அவருக்கு கல்தா கொடுத்து விட்டார் சிம்பு.
தற்போது ஜெயம்கொண்டான் படத்தில் வினய்யுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார் லேகா. இந்த நிலையில் மந்திரா பேடி வரிசையில், அழகிய கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ளார் லேகா.
ஐபிஎல் போட்டிகளுக்கான கிரிக்கெட் வர்ணனையாளர் வரிசையில் லேகாவும் இணைந்துள்ளார். பெங்களூரில் நடந்த முதல் போட்டியிலிருந்து இந்தப் பணியை அவர் தொடங்கியுள்ளார்.
ரமீஸ் ராஜா, அஜய் ஜடேஜா, அருண்லால், சிவராமகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து லேகாவும் அழகாக வர்ணனையில் ஈடுபட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் முழுவதும் வர்ணனையாளராக செயல்படப் போகிறாராம் லேகா. லேகாவுடன், மந்திரா பேடியும் கமென்ட்ரி கொடுப்பது டபுள் போனஸாக இருக்கிறது.
அன்றைய போட்டிகளின் முக்கிய நிகழ்வுள், பேட்டிகள், அடுத்து வரும் போட்டிகள் குறித்த விவரங்களை அழகாக எடுத்துரைக்கிறார் லேகா.
குட் ஷாட்!