குழந்தைங்கதான் முக்கியம்! - ராணா வாய்ப்பை மறுத்த மாதுரி
ரஜினி படத்தில் ஒரேயொரு காட்சியில் வந்தால் கூட போதும் என்று ஆளாளுக்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள். கதாநாயகிகள் இந்த வாய்ப்புக்காக தவம் கிடக்கிறார்கள்.
ஆனால் வந்த வாய்ப்பை மறுத்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணாவில் வயதான ரஜினிக்கு ஜோடியாக வரும் பாத்திரத்துக்காக மாதுரியிடம் பேசினார்களாம். ஆனால் மாதுரியோ, இந்த ஆண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் அமெரிக்கா போயாக வேண்டும். அப்போதுதான் என் குழந்தைகளை சமாதனப்படுத்த முடியும். பட வாய்ப்பைவிட இப்போது எனது குழந்தைகளும் குடும்பமும்தான் முக்கியம். தப்பா எடுத்துக்காதீங்க, என்று சொல்லிவிட்டாராம்.
மாதுரி ஏற்கெனவே ரஜினிக்கு ஜோடியாக உத்தர் தக்ஷின் படத்தில் நடித்துள்ளார். மாதுரியின் கணவர் நேனே சஹானி அமெரிக்காவில் மருத்துவராக உள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications