மறுபடியும் கோலிவுட்டில் மல்லிகா!

பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் மல்லிகா ஷெராவத்தை தமிழில் அறிமுகப்படுத்திய படம் தசாவதாரம். கவர்ச்சி கொப்பளிக்க அவர் அதில் நடித்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் மறுபடியும் மல்லிகாவை தமிழ் ரசிகர்கள் தரிசிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
2005ம் ஆண்டு இந்தியில் மல்லிகாஷெராவத் கவர்ச்சி களியாட்டம் போட்டிருந்த பச்கே ரெஹனா ரே பாபா படத்தை தமிழில் மல்லிகா காமினி (படிக்கும் போது சரியாக படிக்கவும்) என்ற பெயரில் டப் செய்துள்ளனர்.
கோடீஸ்வர கோமான்களை தனது கவர்ச்சிவலையில் வீழ்த்தும் அழகியாக இப்படத்தில் நடித்துள்ளார் மல்லிகா. படம் முழுக்க மல்லிகாவின் கவர்ச்சி அமளி துமளியாக இருக்கிறதாம்.
படத்தில் முன்னாள் கனவுக்கன்னி ரேகாவும் இருக்கிறார்.கோவிந்த் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதேபோல ஷில்பா ஷெட்டியும், தங்கச்சி ஷமீதா ஷெட்டியும் கிளாமராக நடித்துக் கலக்கியுள்ள பாரேப் என்கிற இந்திப் படமும் தமிழுக்கு வருகிறது. படத்திற்கு காம சதி லீலாவதி என படு பொருத்தமாக பெயரிட்டுள்ளனர்.
தெலுங்கிலிருந்தும், மலையாளத்திலிருந்தும் ஏகப்பட்ட படங்கள் தமிழுக்கு வந்த காலம் மலையேறி ஆங்கிலப் படங்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு தமிழ் திரையுலகை ஆட்டிப்படைத்து வருகின்றன. இந்த போட்டியில் இப்போதும் இந்தியும் குதித்திருக்கிறது.
ஒரிஜினல் தமிழ் கிரியேட்டர்கள் உஷாராகிக் கொண்டால் நல்லது.


Click it and Unblock the Notifications











