கோபிகா, மம்முட்டி, லஷ்மி ராய்

ராஜமாணிக்கம் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த பின்னர் மீண்டும் இயக்குநர் அன்வர் ரஷீத்துடன் இணைகிறார் மம்முட்டி. இந்தப் படத்திற்கு அண்ணன் தம்பி என பக்கா தமிழில் பெயரிட்டுள்ளனர்.
இது ஒரு இரட்டையர்களின் கதை. அண்ணன் தம்பி வேடங்களில் மம்முட்டி நடிக்கிறார். கோபிகாவும், லஷ்மி ராயும் உடன் நடிக்கவுள்ளனர்.
ஏற்கனவே மம்முட்டியுடன் மாயாவி படத்தில் ஜோடி சேர்ந்திருந்தார்
கோபிகா. இப்போது 2வது முறையாக இணைகிறார்.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் வைத்து படு சூடாக நடந்து கொண்டிருக்கிறதாம். மலையாளப் புத்தாண்டுக்கு படம் திரைக்கு வருகிறதாம்.
சண்டை போடாம வாங்க!
Comments


Click it and Unblock the Notifications