தெய்வமகனுக்கு மீரா ஓ.கே.!

By Staff

Meera Jasmine
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் தெய்வமகன் படத்தில் நடிக்க முதலில் இழுத்தடித்து வந்த மீரா ஜாஸ்மின் இப்போது அப்படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லி விட்டாராம்.

பாலாஜி என்பவரின் தயாரிப்பில், வெற்றி என்பவரின் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நடிக்க உருவாகும் படம் தெய்வமகன். இப்படத்தின் டைட்டில் முன்பு சிவாஜி கணேசன் நடித்து வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் என்பதால் இந்த டைட்டிலை பயன்படுத்த எதிர்ப்புக கிளம்பியது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சிலும் கூட பாலாஜியை கூப்பிட்டுக் கண்டித்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து தெய்வ மகன் என்ற பெயரையே பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைவருமே புதுமுகங்கள் என்பதால் படத்திற்கு வெயிட் ஏற்றுவதற்காக மீரா ஜாஸ்மினை நாயகியாகப் போட முடிவு செய்து அவரை அணுகினர். முதலில் ஒத்துக் கொண்ட மீரா பின்னர் விருப்பமில்லாமல் இருந்து வந்தார்.

ஆனால் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் விடாத துரத்தல் பிளஸ் அணத்தல் காரணமாக இப்போது நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் மீரா. தான் நடிக்கவிருப்பதை சமீபத்தில்தான் உறுதி செய்தாராம்.

இதையடுத்து புதுப் பூரிப்புடன் தெய்வமகனை உருவாக்க கிளம்பியுள்ளார் இயக்குநர் வெற்றி.

வெற்றி - கிடைக்கட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X