வருகிறார் இன்னொரு மீரா!

ஆசின்களையும், நயனதாராக்களையும், மீரா ஜாஸ்மின்களையும் கொடுத்த கேரளாவிலிருந்து வரும் மீரா நந்தகுமார், இன்னொரு அழகுப் பதுமையான பாமாவைப் போல மலையாளத்தில் புது வாசம் வீசிக் கொண்டிருக்கும் அழகிய நடிகை. இப்போது பூபதி பாண்டியன் படம் மூலம் தமிழையும் தாலாட்ட வருகிறார்.
தற்போது மலையாளத்தில் முல்லா என்கிற படத்தில் திலீப்புடன் இணைந்து நடித்துள்ளார் மீரா. படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அவரைப் பற்றி மலையாளத்தில் பேச ஆரம்பித்து விட்டனர்.
திருவிளையாடல், மலைக்கோட்டை உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்த பூபதி பாண்டியன் அடுத்து இயக்கப் போகும் படம் நானும் என் சந்தியாவும். இதில்தான் மீரா நடிக்கிறார். தேவதையைக் கண்டேன் படம் போல இதுவும் காமெடி பிளஸ் சென்டிமென்ட் நிறைந்த படமாக இருக்குமாம்.
படத்தில் ஹீரோவாக நடிப்பவர் புதுமுகம் பிரபு. இவர் வேறு யாருமல்ல பூபதியின் சொந்தத் தம்பிதான். படத்தையும் பூபதியே தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை முடித்து விட்டு விக்ரமை வைத்து ராஜ வேஷம் படத்தை இயக்கும் பூபதி பாண்டியன் அதன் பின்னர் மறுபடியும் தனுஷுடன் இணைகிறார்.


Click it and Unblock the Notifications











