இறங்கி வந்தார் நமீதா!

அழகான பொண்ணு என்ற படத்தில் நடித்து வந்த நமீதா திடீரென அதில் நடிக்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்தார். இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திரு, நமீதாவை தொடர்ந்து அணுக, அவரோ, திரு டார்ச்சர் செய்வதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
பதிலுக்கு திருவும் தயாரிப்பாளர் சங்கத்தில் தாக்கலைப் போட்டார். இதையடுத்து இரு தரப்பையும் வர வைத்து கடந்த 19ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இரு தரப்பும் நடந்த சம்பவங்களை மறந்து, நட்புணர்வோடு படத்தைத் தொடருவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நமீதாவும், திருவும் கைகளைக் குலுக்கிக் கொண்டனராம். இன்னும் 15 நாட்களுக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக நமீதா ஒப்புக் கொண்டுள்ளாராம்.
கடந்த 2006ம் ஆண்டு இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ரூ. 17 லட்சம் அட்வான்ஸ் தரப்பட்டது. ஆனால் 6 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தார் நமீதா. இந்த நிலையில் திடீரென இயக்குநர் மாற்றப்பட்டார். தயாரிப்பாளர் திருவே, இயக்குநர் அவதாரம் எடுத்தார். இதனால் நடிக்க மறுத்து விட்டார் நமீதா.
இதனால்தான் பிரச்சினை எழுந்தது. தற்போது பிரச்சினை சரியாகி விட்டதால் படத்தை முடிக்கு கொடுக்க முன்வந்துள்ளார் நமீதா. இப்படத்தில் நடித்துக் கொடுக்க கூடுதலாக ஒரு பைசாவும் நமீதா கேட்க மாட்டார். ஏற்கனவே கொடுத்த 17 லட்சத்தோடு கதையை முடித்துள்ளனர்.
பஞ்சாயத்து சமூகமாக முடிந்ததால், நமீதா அழகான பொண்ணு மட்டுமல்ல, நல்ல பொண்ணும் கூட என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நமீதாவைப் பாராட்டினராம்.


Click it and Unblock the Notifications











