பிரபுதேவாவுடன் 'வான்டட்' பார்த்த நயன்!

முதல்முதலாக தனது அன்புக்குரியவர் இந்தியில் இயக்கியுள்ள படம் என்பதால், அந்தப் படம் ரிலீசாகும்போது பிரபுதேவாவுக்கு 'பக்கபலமாக' நிற்க மும்பை போனாராம் நயன்தாரா. இந்தப் படத்துக்காக மும்பையில் எந்த பிரிமியர் ஷோவும் நடத்தப்படவில்லை. எனவே பிரபுதேவாவே நயன்தாராவுக்காக தனி ஷோ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
ஆனால் இந்த ஷோ வேண்டாம் என்று கூறிய நயன்தாரா, ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்கலாம் என பிரபு தேவாவுக்கு கூற, அப்படியே செய்தாராம்.
பாந்த்ராவில் உள்ள சினிமாக்ஸ் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை இருவரும் ரசிகர்களுடன் பார்த்தார்களாம்.
படம் முடிந்ததும், பிரபு தேவாவை பாராட்டித் தள்ளிய நயன், இந்தியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இனி வரும் என வாழ்த்தினாராம்.
சும்மா சொல்லக் கூடாது, படமும் அங்கு வெற்றிகரமாக ஓட ஆரம்பித்துள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications