நயனதாராவின் பிஎம்டபிள்யூ!

By Staff

Nayanatara
பெரிய காருக்குச் சொந்தக்காரியாகியுள்ளார் நயனதாரா.

இருப்பதிலேயே பெரிய, சொகுசான, வசதியான கார் பிஎம்டபிள்யூதான். இந்தக் காருக்குச் சொந்தக்காரர்கள் சென்னையில் கொஞ்ச பேர்தான். அந்த வரிசையில் இப்போது நயனதாராவும் இணைந்துள்ளார்.

கடந்த வாரம்தான் புத்தம் புதிய பிஎம்டபிள்யூ காரை அமெரிக்காவிலிருந்து இம்போர்ட் செய்துள்ளார் நயனத்ரா. இது வழக்கமான பிஎம்டபிள்யூவை விட சற்று அதி நவீன வசதிகள் கொண்டதாம். இந்த வகை கார்கள் இப்போதுதான் இந்தியாவுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் அதி நவீன பிஎம்டபிள்யூவின் ஓனர் என்ற பெருமை நயனதாராவுக்குக் கிடைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த லட்சுமி தெலுங்குப் பட ஷூட்டிங்குக்காக போன இடத்தில்தான் இந்தக் காருக்கு ஆர்டர் கொடுத்தாராம் நயன். ஆர்டர் கொடுத்து 2 மாதங்கள் கழிந்த நிலையில் இப்போது காரை டெலிவரி செய்துள்ளனராம்.

நயனதாராவுக்கு ராசியான எண் 9 (அட, அம்மா நம்பர்). அதே எண்ணை இந்தக் காருக்கும் பதிவெண்ணாக பெற முயன்று வருகிறாராம் நயனதாரா. ஆனால் கேரளாவில் இதை பதிவு செய்ய சென்றபோது 9ம் நம்பர் எல்லாம் கொடுக்க முடியாது என்று கறாராக கூறி விட்டார்களாம் சேட்டன்மார்கள்.

ஆனால் சென்னை ஆர்.டி.ஓ. பிரதர்ஸ் அப்படியெல்லாம் இல்லை என்ற அதீத நம்பிக்கையில் 9ம் நம்பருக்காக முயற்சித்து வருகிறாராம் நயனதாரா. இந்த வேலையில் நயனதாராவின் பிஆர்ஓ படு மும்முரமாக ஈடூபட்டுள்ளாராம்.

நயனதாரா வாங்கிப் போட்டுள்ள இந்த அதி நவீன சொகுசுக் கார் கேரளாவில் அவர் வாங்கிப் போட்டுள்ள வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறதாம். விரைவில் அந்தக் காரை தனது கையாலேயே சென்னைக்கு ஓட்டிக் கொண்டு வரப் போகிறாராம் நயனதாரா.

ஏற்கனவே விஜய், தனுஷ், பிருத்வித்ராஜ் போன்ற சில நட்சத்திரங்கள் பிஎம்டபிள்யூ வைத்துள்ளனர். ஆனால் தென்னிந்தியத் திரையுலகிலேயே முதல் முறையாக இந்தக் காரை வாங்கிய பெருமை மெகா ஸ்டார் மம்முட்டிக்குத்தான் போய்ச் சேரும்.

கண்ணுபடப் போகுதய்யா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X