கேரளாவில் பதுங்கியிருக்கும் ரஞ்சிதா-விரைவில் கைது?

அவர் தற்போது கேரளாவில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நித்தியானந்தா இன்று இமாச்சல் பிரதேசத்தில் வைத்து பிடிபட்டுள்ளார். அவரை பெங்களூருக்குக் கொண்டு வர கர்நாடக போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நித்தியானந்தாவுடன் சேர்ந்து தலைமறைவான நடிகை ரஞ்சிதாவும் கர்நாடக போலீஸாரிடம் விரைவில் சிக்குவார் எனத் தெரிகிறது.
நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் சேவை செய்து சிக்கிய ரஞ்சிதா அந்த சர்ச்சைக்குப் பின்னர் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.
நித்தியானந்தாவின் உதவியாளர்கள், ரஞ்சிதாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று பத்திரமாக வைத்திருப்பதாக தகவல்கள் கூறின. ஆனால் ரஞ்சிதா கேரளாவில் பதுங்கியிருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.
விரைவில் ரஞ்சிதாவையும் போலீஸார் கைது செய்வார்கள் என்று தெரிகிறது.
Comments


Click it and Unblock the Notifications