தீபிகாவுக்காக 'ஆர்கானிக்' சிகரெட்!

Deepika Padukone
கார்த்திக் காலிங் கார்த்திக் என்ற இந்திப் படத்தில் நடித்து வரும் தீபிகா, இப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார். ஆனால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத, நிக்கோடின் கலக்காத சிகரெட்டுகளை வாங்கி தீபிகாவுக்கு கொடுத்து 'தம்' அடிக்க விட்டுள்ளனராம்.

முதலில் தீபிகா தம் அடிப்பதற்காக விலை உயர்ந்த சிகரெட்டுகளை வாங்கி வந்தனர். அதைப் பார்த்த தீபிகா, நிஜமான சிகரெட்டை புகைப்பது போல நடித்தால் எனக்கு அது பழக்கமாகி விடுமோ என்று பயப்படுகிறேன் என்று இயக்குநரிடம் கூறியுள்ளார். என்ன செய்யலாம் என்று யோசித்த இயக்குநர், தயாரிப்பாளர் ரிதேஷ் சித்வானியிடம் செல்ல, அவர் நிக்கோடின் கலக்காத ஆர்கானிக் சிகரெட்டுகளை வாங்கிக் கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி பாதிப்பே ஏற்படுத்தாத ஆர்கானிக் சிகரெட் வரவழைக்கப்பட்டதாம். அதை புகைத்தபடி நடித்தாராம் தீபிகா.

கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தில், படு மாடர்ன் பொண்ணாக வருகிறாராம் தீபிகா. இப்படத்தில் செயின் ஸ்மோக்கராக வரும் தீபிகாவை அந்தப் பழக்கத்திலிருந்து நாயகன் பர்ஹான் மாற்றுவது போல காட்சி வருகிறதாம்.

இந்தக் காட்சிகளுக்காக படு கூலாக தம் அடித்துள்ளார் தீபிகா. ஆனால் நிஜத்தில் புகையைக் கண்டாலே தீபிகாவுக்கு ஆகாதாம்.

படத்தில் புகை பிடிக்கும் காட்சி உள்ளது என்று இயக்குநர் கூறியதுமே டென்ஷனாகி விட்டாராம். ஏன் இப்படியெல்லாம் என்று கேட்டு தவிர்க்கப் பார்த்துள்ளார். இருப்பினும் காட்சியின் முக்கியத்துவம் கருதி தம் அடிக்க ஒப்புக் கொண்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X