மறுபடியும் ப்ரீத்தி வர்மா!

By Staff

Preethi Varma
ரொம்ப நாளாக நடிப்புப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருந்து வந்த நடிகை ப்ரீத்தி வர்மா மீண்டும் கேமராவுக்கு முகம் காட்ட வருகிறார்.

ஆந்திராவில் ஷூட்டிங்குக்குப் போன இடத்தில் காதலருடன் ஓடிப் போனதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ப்ரீத்தி வர்மா. பின்னர் திரும்பி வந்த ப்ரீத்தி வர்மா தனது பெற்றோர் மீது சரமாரியாக புகார்களை அடுக்கி மேலும் பரபரப்பைக் கூட்டினார்.

இப்போது பெற்றோரை விட்டு விலகி தனிக்குடித்தனம் செய்து வரும் ப்ரீத்தி வர்மா, ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்பட்டது. அவர் இனி நடிக்கவும் மாட்டார் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் மறுபடியும் கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ளார் ப்ரீத்தி வர்மா.

ரங்கபாபு என்பவருக்கு ஜோடியாக ராமன் நல்ல பிள்ளை என்ர புதிய படத்தில் அவர் நடிக்கிறார் - நாயகியாகத்தான்.

இது 14ம் நூற்றாண்டு காலத்தில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இக்காலத்து கதை.

பரனீத் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இதை உருவாக்குகிறார்களாம்.

தொடர்ந்து ப்ரீத்தி நடிப்பாரா அல்லது, நல்ல பிள்ளையாக இந்தப் படத்தோடு முடித்துக் கொள்வாரா என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X