அடுத்த 'ஷோ'வுக்கு ராக்கி ரெடி!

By Staff

Rakhi Sawant
சுயம்வரம் நடத்தி தன்னை மணக்கப் போகிறவரை தேர்ந்தெடுத்து விட்ட ராக்கி சாவந்த், தற்போது அடுத்த ரியாலிட்டி ஷோவுக்குத் தயாராகி விட்டார்.

சமீபத்தி்ல ராக்கி நடத்தி சுயம்வரம் என்ற ரியாலிட்டி ஷோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சுயம்வரம் மூலம் எலேஷ் பருஜன்வாலா என்ற வெளிநாட்டு இந்தியரை தனது கணவராக தேர்ந்தெடுத்தார் ராக்கி.

இப்போது ராக்கியும், எலேஷும் இணைந்து Pati Patni Aur Woh என்ற புதிய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கப் போகின்றனர். அந்த ரியாலிட்டி ஷோவில் இருவரும் தாய், தந்தையாக நடிக்கப் போகிறார்களாம். இவர்களுக்கு ஒரு குழந்தை கொடுக்கப்படும்.

ஒரு மாதத்திற்கு குழந்தைகளுடன் போட்டியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் இப்போதே ராக்கிக்கு தலைவலி வந்து விட்டதாம். காரணம், அவருக்கு மைக்ரேன் பிரச்சினை உள்ளதாம். ஏதாவது ஒரு குழந்தை அழுதாலே அவருக்கு தலை வலி வந்து விடுமாம். அப்படி இருக்கையில், எப்படித்தான் ஒரு மாதம் ஒரு புதிய குழந்தையுடன் சமாளிக்கப் போகிறேனோ என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ராக்கி.

அதை விட பெரிய கவலை சமையல் செய்ய வேண்டுமே என்பதாம். எனக்குப் பிடிக்காத முக்கிய விஷயமே சமையல்தான் என்கிறார் ராக்கி.

சரி எலேஷ் எப்படி என்று ராக்கியிடம் கேட்டால், இன்னும் நான் எலேஷே சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. சுயம்வர நிகழ்ச்சியில் அதிகம் பழக முடியவில்லை. எனவே இந்த புதிய ரியாலிட்டி ஷோவில் அவரை நன்றாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

உண்மையான எலேஷை இப்போதுதான் பக்கத்தில் இருந்து பார்க்கப் போகிறேன். எனக்கு ஆதராக இருப்பவரைத்தான் நான் மணப்பேன். அந்த வகையில் எலேஷ் எப்படிப்பட்டவர் என்பது இந்த நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.

இந்தியாவில் கணவர்மார்கள்தான் மனைவிகளை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். நான் ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டால் எலேஷ்தான் பில் கட்ட வேண்டும். அப்படி இருப்பதைத்தான் நான் விரும்புவேன் என்று புன்னகைக்கிறார் ராக்கி.

எப்பா எலேஷு, எப்படிப்பா சமாளிக்கப் போறே...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X