எனக்கு அலுக்காது... ரம்யா கிருஷ்ணன்!

தமிழில் அறிமுகமாகி, தெலுங்குக்குப் போய் மீண்டும் படையப்பா மூலம் தமிழில் ஒரு கலக்குக் கலக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.
நீலம்பரி போன்ற திமிர் பிடித்த வில்லி வேடமா... அல்லது பக்தி ரசம் சொட்டும் அம்மன் வேடமா... அல்லது காமம் ததும்பும் கவர்ச்சி வேடமா.... கூப்பிடுங்கள் ரம்யா கிருஷ்ணனை என்ற நிலைதான் சில ஆண்டுகளுக்கு முன்பு.
ஆனால் திருமணத்துக்குப் பின் வேண்டாம் இந்த சினிமா என ஒதுங்கியவர், மீண்டும் ஆறுமுகம் படத்தின் மூலம் பெரிய திரைக்குத் திரும்பியுள்ளார்.
அதுவும் பவர்புல் வில்லி வேடத்தில். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சின்னத் திரையில் நான் நடித்து வரும் 'கலசம்' சீரியல் மூலம் எனக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனக்கு நடிப்பு என்றுமே போரடிக்காது. நல்ல வாய்ப்புகள் வரும்வரை நடித்துக் கொண்டே இருப்பேன்,
குழந்தை மற்றும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை இருப்பதால் ஐதராபாத், சென்னை தவிர மற்ற வேறு இடங்களில் நடக்கும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை.
திருமணமான புதிதில் நானும் இனி திரையுலகின் பக்கம் திரும்பக் கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால் அது தவறு எனப் புரிந்து கொண்டேன். சினிமாவில்தான் இனி தொடர்ந்து இருக்கப் போகிறேன் என்றார்.
சந்தோஷம்.


Click it and Unblock the Notifications











